சொற்சங்கிலி விளையாட்டு-
சிறுவர்களின் தமிழ் சொல்லாற்றலை வளர்த்துக்கொள்ளப் பல வழிமுறைகள் இருக்கின்றன. புத்தகங்களை வாசித்தல், மனனம் செய்தல் போன்ற வழிமுறைகள் சிலவேளைகளில் சலிப்பைத் தரக்கூடும். பொதுவாக விளையாட்டின் வழியாக மொழியைக் கற்றுக்கொடுக்கும்போது கற்றல் இலகுவானதாயும், மகிழ்ச்சியானதாயும், மனதில் பதியக்கூடியதாயும் அமைகிறது. அவ்வாறான ஒரு விளையாட்டுத்தான் சொற்சங்கிலி. ஏழுவயது சிறுவனான ஹரிணீவ், தனது ஆறாவது வயதிலிருந்து இந்த விளையாட்டை விளையாடி வருகிறார்.
சரி இதை எப்படி விளையாடுவது?
உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு சொல்லில் தொடங்குங்கள். அதன் கடைசி எழுத்தை முதலெழுத்தாகக்கொண்டு அடுத்த சொல்லை எழுதுங்கள். அதன் கடைசி எழுத்தை முதலெழுத்தாகக் கொண்டு அடுத்த சொல்லைத் தொடருங்கள். ஒரு அளவிற்குமேல் சங்கிலியைத் தொடரமுடியாவிட்டால் புதிய சங்கிலியைத் தொடங்குங்கள். ஒரு சங்கிலியில் வந்த சொல் இன்னொரு சங்கிலியில் வரமுடியாது. ஹரிணீவ் தான் உருவாக்கிய சில சொற்சங்கிலிகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

ஐந்து வயாதான ஆதிரா தனது முதலாவது சொற்சங்கிலி முயற்சியைப் பகிர்ந்துள்ளார்

நாங்களும் சொற்சங்கிலி விளையாடுவோமா? உங்கள் சொற்சங்கிலிகளை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
நல்லதொரு பொழுதுபோக்கு…
நல்ல முயற்சி 👏👏
எங்கள் சொற்சங்கிலியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம்….
அம்மா
மாடமாளிகை
கைராசி
சிரிப்பு
புன்னகை
கைதி
திகதி
திராட்சை
சைகை
கைகலப்பு
புதிது
துப்பு
புலவி
விளக்கு
குறுக்கு
குளவி
விளம்பி
பிதா
தாத்தா
தாழ்மை
மைதா
தாரகை