இந்த இதழில் நீங்கள் கடக்கப்போகும் அவளது வாழ்க்கைக்கதையின் கதவுகளை இந்த ஒரு வரி சாவி கொண்டு கண்டுபிடியுங்கள்
அவள்
தந்தைக்குத் தன்னம்பிக்கை தந்தாள்
தத்தெடுத்த நாட்டில் தன்னிடம் தெரியாமல் தடுமாறினாள்
அவளிடம் கேட்காமல் வந்த வாழ்க்கையை அவனுடன் தொடங்கினாள்
அவனை முழுமையாக அறியுமுன் முழுவதுமாகத் தொலைத்தாள்
மறுமுறை வாழ்க்கை அமையாதா என ஏங்கினாள்
மாதவிடாய் துயரத்தை யார்துணையுமின்றிக் கடந்தாள்
கேட்காமல் வந்த உயிர்க்கொல்லியை
அனைவருக்கும் சொல்லி வழியனுப்பினாள்
இன்று உங்கள் கைகளில் இளவேனிலாக அவள்!