”அண்ணா….”
தம்பியின் சத்தத்திற்கு விழித்தேன். நான் இன்னமும் பாடசாலை campingல் அல்லவா இருக்கிறேன்? தம்பியோ என்னை உலுக்கினான்.
“அண்ணா. நீங்கள் இன்று துடுப்பாட்டத்திற்குச் செல்ல வேண்டும். நேரமாகிவிட்டது. எழும்புங்கள்.”
அவனின் பதற்றம் என்னையும்பதற்றப்படுத்தியது. இன்று regional துடுப்பாட்டத்திற்கு நான் செல்ல வேண்டும். வேகமாகக் கிளம்பி என்னுடைய புதுச் சப்பாத்துடன் நான் பாடசாலைக்குச் சென்றேன். அங்கு மூன்று பேருந்துகள் கம்பீரத்துடன் நின்றன. எதில் போகவேண்டும் என்ற சிந்தனையில் நிற்கும்போது, “Branev 4th bus” என்று ஆசிரியர் சொன்னார். என்னுடைய தலை திரும்பியது. பின்னால் தூசி பிடித்த குப்பை வண்டி தெரிந்தது. அப்படித்தான் புதன்கிழமை பாடசாலை முகாமிற்குச் சென்றோம். “Thank god” இன்று ஒரே ஒரு பஸ்தான் நிக்குது என்று எண்ணும்போது, நண்பர்கள் கூப்பிட்டார்கள். நாங்கள் கதைத்துக்கொண்டே கிரிக்கட் மைதானத்துக்குப் பேருந்தில் சென்றோம்.
9:15க்குத்தான் முதல் போட்டி என்று ஆசிரியர் சொன்னார். மிகுந்த ஆவலுடனும் பதற்றத்துடனும் சென்றோம். Tossல் தோற்று துடுப்பாடத் தயாரானோம். ஒவ்வொரு சோடியும் இரண்டு ஓவர்கள் முடிவில் வெளியே வந்தார்கள். ஓட்டங்கள் எதுவும் எடுக்கவில்லை. என்னுடைய முறை நெருங்கிக்கொண்டிருந்தது. நெஞ்சு “திக் திக்” என்று அடித்தது. Camp நினைவுகளில் மூழ்கினேன். “என் கையில் இருந்த வெள்ளை நூலை “3,2,1” என்று சொன்ன பின் இழுக்க வேண்டும் என்பது “giant swing”ல் தரப்பட்ட அறிவுறுத்தல். “ திக் திக்” சத்தம் கூடியது. நான் உயரத்தில் இருந்தேன். “3,2,1” சத்தம் கேட்டது. நூலை இழுத்தேன். கீழே விழத்தொடங்கினேன். “swing ல் தவறு இருக்குமா?” தொண்டை அடைத்தது. “Branev, it’s your turn” என்ற பயிற்சியாளரின் சத்தம் என் நினைவுகளை உடைத்தது.
முதல் பந்து வேகமாக வந்து காலில் விழுந்தது. Campல் கண்களைக் கட்டிக்கொண்டு தடை தாண்டும் போது அடிபட்ட காலில் மீண்டும் பந்தடியும் பட்டது. 2 ஓவர் முடிவில் 26 ஓட்டங்களை எடுத்து நான் வெளியே வந்தேன். நமது அணியின் ஓட்டங்கள் சொல்லுமளவிற்குப் பெரிதாய் இல்லை. நாங்கள் நன்றாகப் பந்து வீசினாலும் எதிரணியினர் எம்மை இலகுவாகத் தோற்கடித்தனர். படு தோல்வி அடைந்தோம். முதல் போட்டியிலே தோல்வியா? எல்லோர் முகமும் சோகத்தில் வாடியது. Campஇலேயே நின்றிருக்கலாமோ? Regional கிரிக்கட்டுக்காக நான் campஐ விட்டு வந்தது பிழையா? Raft building இன்று செய்வார்கள். புது அனுபவம் கிடைத்திருக்கும் என்று எண்ணினேன்.
அடுத்து வந்த போட்டியில் எல்லோரும் பதற்றப்படாமல் நன்றாக விளையாடினாலும், அங்கும் வெற்றி எமது கையிலிருந்து வழுக்கிச் சென்றது. மூன்றாவது போட்டியில் நாம் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்று முடிவெடுத்தோம். எமது பயிற்சியாளரின் ஆலோசனைக்கு ஏற்ப நான் wicket keeper ஆக நின்றேன். முதல் பந்து வந்தது. எங்கள் அணியிடம் இல்லாத மரத்தாலான bat, glove எல்லாம் அவர்களிடம் இருக்கிறது என்று நான் யோசிக்கும்போதே, வேகமாக வந்த பந்து wicketஐத் தட்டியது. முதல் ஓவரிலேயே 2 விக்கட் விழுந்தது. உற்சாகம் பிறந்தது. எனது முதல் பந்தில் நான் 4 ஓட்டங்கள் கொடுத்தேன். நம்ப முடியவில்லை. 2வது பந்தில் ஒரு விக்கட். எங்கள் அணியின் முதல் வெற்றி. எல்லோர் முகத்திலும் சந்தோசமும் உற்சாகமும் தெரிந்தது. நான் campல் இருந்தபோது canoe volley ballல் வெற்றி பெற்றது நினைவுக்கு வந்தது.
”if we win rest of all the games, we can get 5th place out of 8” என்று பயிற்சியாளர் சொன்னார். பயிற்சியாளரின் ‘pep talk’ எம்மை உற்சாகப்படுத்தியது. அடுத்த போட்டிக்கு முனைப்புடன் போனோம். நான் 2வது ஓவரில் 3 விக்கட்கள் எடுத்தேன். 1 ரன் அவுட் மற்றும் 2 கட்சும் எடுத்தேன்.
அடுத்து batting. என் முறை மின்னல் வேகத்தில் வந்துவிட்டதுபோல் இருந்தது. நான் என் பார்ட்னருடன் நடுக்கமின்றித் தன்னம்பிக்கையுடன் சென்றேன். முதல் பந்தை block பண்ணினேன். 2வது பந்தில் 4 ஓட்டங்கள் எடுத்தேன். நானும் எனது 5 பேர் கொண்ட குழுவும் “நாடுகளின் கொடிகள்” இரவில், treasure hunt செய்தோம். வெற்றி எங்கள் கண்ணில் தெரியும் தூரத்தில் இருந்தது. பந்தை அடித்துவிட்டு இன்னும் வேகமாக ஓடினோம். நான் bat பண்ணி முடிக்கும் போது எங்கள் அணிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. சுலபமாக அடித்து வெற்றி பெற்றோம்.
Serpellன் 2025 கிரிக்கட் அணியின் கடைசிப் போட்டி நெருங்கியது. எங்கள் பயிற்சியாளர் உரையாற்றத் தொடங்கினார்.
“For some, this is the last game you will play for Serpell. Maybe for the school or maybe forever. If we in this game, we ll get 5th place. Lose, we get 6th”
இதைக் கேட்ட பின்னர் எல்லோரும் உற்சாகத்துடன் இந்த வருடத்தின் கடைசி பாடசாலை துடுப்பாட்டப் போட்டியை விளையாடத் தயாரானோம். நாங்கள் இன்று விளையாடும்போது எங்களை ஆரம்பத்தில் தோற்கடித்த அணிதான் எதிரணியாக வந்தது. “easy win” என்று அவர்களுள் ஒருத்தன் சொன்னான். பயிற்சியாளர் அதற்கு “they might not have been playing the best” என்றார். tossல் தோற்று bowling எடுத்தோம்.
முதல் ஓவரில் 2 six எடுத்தார்கள். நான் பந்து போடும்போது 1 wicket maid in over போட்டேன். அடுத்து எல்லோரும் நன்றாக batting செய்தோம். கடைசி 2 ஓவரில் 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது. முதல் ஓவரிலேயே 20 ஓட்டங்களை அடித்து வெற்றி பெற்றுவிட்டோம். 5ம் இடத்தையும் பெற்றோம்.
நான் பேருந்தில் திரும்பி வரும்போது எனது நினைவு மீண்டும் வந்தது. முன்பு ஒரு நாள் பள்ளி முடிந்து வீடு வந்ததும் “regional cricket, campன் 3ம் நாளில் வருகிறது” என்று அம்மா சொன்னார். நீங்கள் camp அல்லது regional cricket, ஏதாவது ஒன்றுக்குத்தான் போகமுடியும் என்று அம்மா சொன்னதைக் கேட்டுத் திடுக்கிட்டேன். ஆனாலும் அடுத்த நிமிடம் எந்தச் சந்தேகமும் இன்றி கிரிக்கெட் என்று சொன்னேன். அடுத்து வந்த சண்டைகளை மறக்க முடியுமா? நண்பனின் அப்பாவின் car pooling இனால் வியாழக்கிழமை campஇலிருந்து வீடு வருவது என்று முடிவானது. என்னுடைய ஆசை நிறைவேறி இருந்தாலும் campஐ விட்டு வந்தது சோகத்தைத் தந்தது. நான் கிரிக்கெட்டிற்கு வந்திருக்காவிட்டால் 5ம் இடம் கிடைத்திருக்குமா? நான் எடுத்த முடிவு சரியா? என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும்போதுதான் camping பேருந்தும் வந்தது. எல்லோரும் இறங்கினோம். என் நண்பர்களுடன் கதைத்தேன். Raft building அவ்வளவு fun இல்லையாம். நானும் அவர்களும் எம்முடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் எடுத்த முடிவு சரியா? தவறா?