ஜேகே

முக்குழி அப்பம்

10 நிமிட வாசிப்பு | 77 பார்வைகள்
July 26, 2025 | ஜேகே

புகைப்படங்கள் – ஜீவிகா தேங்காய்ச் சிரட்டை ஒன்று தும்புகள் எல்லாம் நீக்கப்பட்டு, அதன் கண்களும் அகற்றப்பட்டுத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. இப்ப இந்தச் சிரட்டைல மூன்று குழிகள் இருக்கல்லா? அதாலதான் முக்குழி எண்ட பெயர் வந்தது. இதால மூடி வச்சுச் சுடுறதால இத முக்குழி அப்பம் எண்டு கூப்பிடுவம்.  எங்கள் வீட்டில், வார இறுதிகளில் காலை நேரத்து உணவாகப் பல தடவைகள் முக்குழி அப்பத்தை அம்மா சுட்டுக் கொடுத்திருக்கிறார். புட்டு, இடியப்பம், […]

மேலும் பார்க்க

இக்கணம்

10 நிமிட வாசிப்பு | 127 பார்வைகள்
February 6, 2025 | ஜேகே

எங்கள் வீட்டின் பின் வளவில் சிறு புற்தரை ஒன்றுண்டு. அதன் நடுவே பறவைகள் நீர் அருந்தவும் நீராடி மகிழவும் எனச் சிறு நீர்த்தொட்டி ஒன்றை வைத்திருக்கிறோம். வெயில் காலம் வந்துவிட்டால் போதும். அந்தத் தொட்டியைத் தேடிப் பலவிதமான பறவைகள் வருவதுண்டு. பச்சைக் கிளிகள், பஞ்சவர்ணக் கிளிகள், புறாக்கள், மக் பைகள், கொக்கடூகள், புலுனிக்குஞ்சுகள், மைனாக்கள், காகங்கள், பலாக்கொட்டைக் குருவிகள் என்று அவற்றின் பெயர்களைச் சரியாக அறிந்துகொள்ளவே எனக்கு வருடக்கணக்கானது. குளிர் […]

மேலும் பார்க்க

பிள்ளை

10 நிமிட வாசிப்பு | 315 பார்வைகள்
September 11, 2024 | ஜேகே

எங்கள் வீட்டுக்குப் பிள்ளை வருவதில் எனக்கு ஆரம்பத்தில் இம்மியளவிலும் இஷ்டமிருக்கவில்லை. நாய்களில்தான் எனக்கு ஈடுபாடு அதிகம். ஈடுபாடு என்று சொல்வதுகூடத் தவறு. நாய்களின்மீது எனக்குப் பேரபிமானமே உண்டு. ஆனால் என் மனைவி சாயிலா பானுவோ தனக்கு நாய்களைப் பிடிக்காது, இஸ்லாத்தில் நாய்களை வளர்ப்பது ஹராம் என்று ஒரே போடாகப் போட்டுவிட்டாள். இத்தனைக்கும் காதலிக்கும்போது நிறைய நாய் காணொளி களை எனக்கு இன்ஸ்டகிராமில் அவள் அனுப் பிக் கொண்டேயிருப்பாள். ஒரு நாய் […]

மேலும் பார்க்க

ஊபர் ஈட்ஸ்

10 நிமிட வாசிப்பு | 280 பார்வைகள்
February 24, 2024 | ஜேகே

நேற்று ஊபர் ஈட்ஸ் விநியோகத்துக்கான பொதியை எடுப்பதற்கு இலங்கை உணவகம் ஒன்றுக்குச் செல்லவேண்டியிருந்தது. பொதியில் ஒட்டியிருந்த பெயரைப்பார்த்ததும் அது ஓர் ஈழத்தமிழரின் ஓர்டர் என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். கொத்து ரொட்டியும் அப்பமும் ஓர்டர் பண்ணியிருந்தார்கள். அரைக்கட்டை தூரத்தில் உள்ள கடையின் கொத்து ரொட்டிக்கு ஊபர் ஈட்ஸ் ஓர்டர் பண்ணும் தமிழர்களும் இருப்பார்களா என்ற ஆச்சரியத்துடன் பொதியை வாங்கிக்கொண்டு அந்த வீடு நோக்கிப்புறப்பட்டேன். வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கவில்லை. இரண்டு மாடியில் பிரமாண்டமான […]

மேலும் பார்க்க
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்