விளையாட்டாப் போச்சு  

190 பார்வைகள் | இதழ் 24

அன்று அலுவலகம் செல்ல இரயில் ஏறியதும் ஜெகாவைப் பார்த்தேன். ஜெகா. என்னை விட 20, 22 வயது சின்னவன். மனைவி சித்ரா. 6 மற்றும் 4 வயது என இரண்டு குழந்தைகள். அழகான, சின்ன, இளம் குடும்பம். அவுஸ்திரேலியா வந்த நாளிலிருந்து மிகவும் பழக்கம். நிறைய விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுபவன். கிட்டத்தட்ட 3 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் பார்க்கிறேன். “ஜெகா… எப்படி இருக்கப்பா? பாத்து வருசக்கணக்காச்சு. […]

மேலும் பார்க்க

மலை உச்சி சூனியக்காரி

189 பார்வைகள் | இதழ் 24
February 24, 2024 | யுவன்

மனித சலனமேயற்ற அடர்காடு. நடுச்சாமம். மழை ‘ஓ’ என்று அலறிக்கொண்டிருந்தது. இராட்சத இடிமுழக்கங்களின் சத்தத்திற்குப் பயந்து சிங்கக் கூட்டங்கள் எல்லாம் குகைக்குள் சென்று பதுங்கியிருந்தன. யானைகள் பிளிறின் வௌவால்கள் அச்சத்தில் அலறி அடித்துக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தன. அப்போது வானத்தைக் கிழித்துக்கொண்டு ஒரு பெரு மின்னல் தோன்றி மொத்தக் காட்டையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. கண நேரம் தான். அதற்குள் சிருகாலன் அந்த மலையைக் கவனித்துவிட்டான். காட்டின் நடுவே தனியே […]

மேலும் பார்க்க

இல்லத்தரசு

139 பார்வைகள் | இதழ் 24
February 24, 2024 | கேதா

பிள்ளைப் பருவத்தில் பெரியவராய் ஆனபின்னர் வெல்லப் பல களங்கள் காத்திருக்கும் என்று சொல்லிப் பள்ளியிலே பயின்ற பாடங்கள் ஏதினிலும் பக்குவமாய்க் கற்றுத் தெளியாத களமொன்று காணீரோ ஏட்டின் அறிவும் இணைந்த பல திறன்களும் நயந்து நாம் வளர்த்த நாட்டமும்-நாளும் முயன்று தெளிந்த முதல் ஞானத் தத்துவமும் இணைந்தாலும் போதாது இவ்வரசை ஆண்டுவிட எல்லோரும் ஆள்வதற்கு இருக்கின்ற ஓரரசு கற்காலம் முதற்கொண்டு தொடர்கின்ற பேரரசு குடிமக்கள் முடிமக்கள் யாவர்க்கும் பொது அரசு […]

மேலும் பார்க்க

எவ்வளவு பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா

156 பார்வைகள் | இதழ் 24

மனிதச் சலனேமயற்ற அடர்காடு. நடுச்சாமம். மழை ”ஓ” என்று அலறிக் கொட்டிக்கொண்டிருந்தது. இராட்சத இடி முழக்கங்களின் சத்தத்திற்குப் பயந்து சிங்கக் கூட்டங்கள் எல்லாம் குகைகளுக்குள் சென்று பதுங்கியிருந்தன. யானைகள் பிளிறின. வௌவால்கள் எல்லாம் அச்சத்தில் அலறி அடித்துக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தன. அப்போது வானத்தைக் கிழித்துக்கொண்டு ஒரு பெரு மின்னல் தோன்றி மொத்தக் காட்டையும் வெளிச்சம் போட்டுக்காட்டியது. “அவ்வ்வ்வ்..” என்று பயத்தில் அலறினார் வடிேவலு. அருகிலிருந்த விஜய் அவரின் வாயை […]

மேலும் பார்க்க

கொலை

144 பார்வைகள் | இதழ் 24

வடிவழகன் கொல்லப்பட்டுக் கிடந்தான். முகத்திலும் மார்பிலும் நான்கைந்து வெட்டுக்காயங்கள் இருந்தன. தலை முடி எல்லாம் பிய்த்தெடுக்கப்பட்டு, வடிவழகனுக்கு அழகு பெயரில் மாத்திரம் எஞ்சியிருந்தது. இரவு அடித்த பெரு மழையில் இரத்தம் வழித்துக் கழுவப்பட்டிருந்தது. அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்திருந்த நர்சிகா அழுதுகொண்டிருந்தாள். இரவு நிகழ்ந்த சம்பவங்கள் கொடுத்த அச்சத்தில் அவளது உடல் இன்னமும் நடுங்கிக்கொண்டிருந்தது. சற்று நேரம் கொலை நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்ட பின்னர் இன்ஸ்பெக்டர் சிருகாலன் நர்சிகாவிடம் வந்தார். “நீங்கள்..” […]

மேலும் பார்க்க

அதிசய நந்தப் பறவை

145 பார்வைகள் | இதழ் 24

மனித சலனமேயற்ற அடர்காடு. நடுச்சாமம். மழை ‘ஓ’ என்று அலறிக்கொண்டிருந்தது. இராட்சத இடிமுழக்கங்களின் சத்தத்திற்குப் பயந்து சிங்கக் கூட்டங்கள் எல்லாம் குகைக்குள் சென்று பதுங்கியிருந்தன. யானைகள் பிளிறின் வௌவால்கள் அச்சத்தில் அலறி அடித்துக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தன. அப்போது வானத்தைக் கிழித்துக்கொண்டு ஒரு பெரு மின்னல் தோன்றி மொத்தக் காட்டையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. கண நேரம் தான். அதற்குள் சிருகாலன் அந்த மலையைக் கவனித்துவிட்டான். காட்டின் நடுவே தனியே […]

மேலும் பார்க்க

மீண்டும் இன்னொரு முறை

229 பார்வைகள் | இதழ் 23

முழக்கம் பெரு முழக்கம் பேரழிவுக்கான அறிகுறி போர்க்களத்தில் ஆயுதங்கள், ராணுவவீரர்கள் என்று கண்கள் எட்டும் தூரம்வரை படை திரட்டப்பட்டது. யுத்தம் இரு கட்சிகளுக்கிடையே  மூள வீரர்கள் ஒன்றின் பின் ஒன்றாய் மடிய குருதி ஆறாகப் பெருக்கெடுத்து வானத்தையே கடுஞ் சிவப்பாக மாற்றியது. அரசியல் மற்றும் சுயநலக் காரணங்களினால் தொடங்கி அப்பாவி மக்களின் உயிரைப் பணயமாக்கி நியாயத்திற்காகவே என்று காரணம் காட்டி அகிலத்தில் நடக்கும் பேரழிவு இந்தப் போர். அனுபவமே சிறந்த […]

மேலும் பார்க்க

ஊபர் ஈட்ஸ்

281 பார்வைகள் | இதழ் 23
February 24, 2024 | ஜேகே

நேற்று ஊபர் ஈட்ஸ் விநியோகத்துக்கான பொதியை எடுப்பதற்கு இலங்கை உணவகம் ஒன்றுக்குச் செல்லவேண்டியிருந்தது. பொதியில் ஒட்டியிருந்த பெயரைப்பார்த்ததும் அது ஓர் ஈழத்தமிழரின் ஓர்டர் என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். கொத்து ரொட்டியும் அப்பமும் ஓர்டர் பண்ணியிருந்தார்கள். அரைக்கட்டை தூரத்தில் உள்ள கடையின் கொத்து ரொட்டிக்கு ஊபர் ஈட்ஸ் ஓர்டர் பண்ணும் தமிழர்களும் இருப்பார்களா என்ற ஆச்சரியத்துடன் பொதியை வாங்கிக்கொண்டு அந்த வீடு நோக்கிப்புறப்பட்டேன். வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கவில்லை. இரண்டு மாடியில் பிரமாண்டமான […]

மேலும் பார்க்க

மலரின் ஓவியம்

150 பார்வைகள் | இதழ் 23

மலரின் ஆசிரியர், சிறார்களிடம் அவர்களின் குடும்பத்தாரை வரையச் சொல்லிக் கேட்டிருந்தார். ஆனால் ஏனோ தெரியவில்லை, மலரால் மட்டும் அவளையும் அவளது பெற்றோரையும் வரைய முடியவில்லை. இருப்பினும் மேசையில் குவிந்திருந்த வண்ணங்களைக் கண்டதும் அவளுக்கும் வரைய ஆசையாக இருந்தது. ஆகையால் அவளுக்குப் பிடித்த மிருகமான புலியை வரைந்திருந்தாள். ஆனாலூம் ஏன் அவளால் அம்மா அப்பாவை வரையமுடியவில்லை எனும் கேள்வி அவளை உறுத்திக்கொண்டே இருந்தது. இப்படி யோசித்துக்கொண்டே வீடு திரும்பிய மலருக்கு வீட்டில் இருந்து […]

மேலும் பார்க்க

சிந்திக்க

155 பார்வைகள் | இதழ் 23

சிட்னியின் கோடைக் காலத்திலே அதிகாலை கலா வீட்டு விறாந்தையிலே அமர்ந்திருந்தாள். இளமஞ்சள் வெய்யில் இதமான உஷ்ணத்தைப் பரப்பியது. முற்றத்துச் செடிகள் மலர்ந்து அழகு காட்ட, அருகிலிருந்த மல்லிகை மணம் கலாவிற்கு ஒரு வித மயக்கத்தை ஊட்டியது. 76 வயது நிரம்பிய அவள் கடந்த ஒரு வருடமாக மகனுடன் வாழ்ந்து வருகிறாள். கலா எத்தனை வயதைத் தாண்டியும் அவள் தன்னை ஒரு மூதாட்டியாகக் கருதியது கிடையாது. ஆனால் அவள் அதை அங்கீகரிக்கிறாளோ […]

மேலும் பார்க்க
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்