மெய்ப்பொருள் காண்பது அறிவு

159 பார்வைகள் | இதழ் 27
February 6, 2025 | Ilavenil

-இளவேனில் ஆசியர் குழு-  பேரன்புக்குரிய வாசகர்களுக்கு எமது இனிய தைத்திருநாள் வாழ்த்துகள். தைமாதம் தமிழ்ப் பண்பாட்டு மாதம். நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தழைத்தோங்கும் மாதம். விடுமுறையில் களித்திருந்து, புதுவருடத்திற்கான உறுதிமொழிகளை எடுத்து, இந்தவருடம் இனிய வருடம் என்று நம்பிக்கையோடு தொடங்கும் புத்தூக்கக் காலத்தில் இளவேனிலினின் இருபத்தியேழாவது இதழில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.   அவுஸ்ரேலியத் தமிழ்ச் சமுகத்தின் குரலாக இளவேனில் இம்முறையும் எல்லா வயதினரதும் ஆக்கங்களைச் சுமந்து வெளிவந்திருக்கிறது. ஆக்கங்களை மக்களிடையே […]

மேலும் பார்க்க

காலப் பயணம்

125 பார்வைகள் | இதழ் 27
February 6, 2025 | Aran Ketharasarma

அகிலன் ஒரு பன்னிரண்டு வயதுச் சிறுவன். ஆனால், அவனுக்குப் பெரியவராய் வரத்தான் விருப்பம். சிறுவனாக இருப்பது பிடிக்கவில்லை. அவனுக்குத் தன் குடும்பம் முக்கியமாகப் படவில்லை. பள்ளிக்கூடமும் பிடிக்கவில்லை, அவனுக்குத் துடுப்பாட்டம் விளையாட மட்டுந்தான் விருப்பம்.   ஓர் இரவு, அவன் கட்டிலில் படுத்திருந்தான். தனியாக வேலைக்குப் போய், காசு உழைப்பது எப்படி இருக்கும் என்று சிரித்துச் சிரித்து யோசித்துக்கொண்டிருந்தான். மறு நாள், அகிலன் பள்ளிக்கூட உடுப்பில் நடை பாதையில் நடந்துக் கொண்டிருந்தான். […]

மேலும் பார்க்க

ஆனந்தனின் ஆகாயப்பயணம்

113 பார்வைகள் | இதழ் 27

விமானம் நிலத்தை விட்டு takeoff ஆகியது. எனது கண் மூடியது. நான் கண் விழித்தபொழுது நான் கண்ட காட்சி என்னை ஆச்சரியம் அடைய வைத்தது. விமானம் தீப்பற்றி இருந்தது. எனது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விமானத்தில் இருந்து வெளியே ஓடினேன். அடுத்த கணமே விமானம் வெடித்துச் சிதறியது.  “இன்னும் கொஞ்ச நாளில் அவர்கள் வருவார்கள்” என்று எனக்குப் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒரு […]

மேலும் பார்க்க

றுசியுடன் சாகசம்

116 பார்வைகள் | இதழ் 27

இன்று எனக்கு ஒரு நல்ல சந்தோசமான நாளாக இருக்கப் போகிறது என்று நம்புகிறேன். நான் இன்று ஒரு அழகான பூங்காவிற்கு போகப் போகிறேன். நான் எனது பூனை றுசியை என்னுடன் கொண்டு போகிறேன்.  “மாலாக் குட்டி…. மாலாக் குட்டி… எழும்புங்கோ. நாங்கள் இப்ப வெளிக்கிட வேணும்” என அம்மா என்னைக் கூப்பிட்டார்.  அப்போது நான் உடுப்பு மாற்றி, பல் துலக்கி, எல்லாம் செய்த பிறகு நாங்கள் காரில் ஏறிப் போனோம். […]

மேலும் பார்க்க

ஒப்பிட்டு உழல் நெஞ்சம்

254 பார்வைகள் | இதழ் 26
September 11, 2024 | கேதா

மானுடராய்க் கூர்ப்படைந்த உயிர்கட்கெல்லாம் மனதுக்குள் மந்திக் குணம் மாறாதுண்டு கடல் தாண்டித் தொலைதூரம் வந்தால் கூட அதைக் கவனமாகக் காவுகிறார் காலந்தோறும் போகின்ற இடம்தன்னை புரிந்திடாமல் போகின்ற நோக்கமதும் புலப் படாமல் பேய் என்ன செய்வதென்றும் முடிவில்லாமல் புகுவார் பின் புகுவதையே தொழிலாய்ச் செய்வார் நிலைகொள்ளா மனதோடு நிதமும் வாடி நடைபோடும் வழி எழிலை நயந்திடாமல் நாளைக்கு என்ன என்றே நடுக்கமுற்று நற்கணங்கள் நாள்தோறும் தொலைக்கின்றாரே தமக்கென்ன வேண்டுமென்ற முடிவை […]

மேலும் பார்க்க

பிள்ளை

315 பார்வைகள் | இதழ் 26
September 11, 2024 | ஜேகே

எங்கள் வீட்டுக்குப் பிள்ளை வருவதில் எனக்கு ஆரம்பத்தில் இம்மியளவிலும் இஷ்டமிருக்கவில்லை. நாய்களில்தான் எனக்கு ஈடுபாடு அதிகம். ஈடுபாடு என்று சொல்வதுகூடத் தவறு. நாய்களின்மீது எனக்குப் பேரபிமானமே உண்டு. ஆனால் என் மனைவி சாயிலா பானுவோ தனக்கு நாய்களைப் பிடிக்காது, இஸ்லாத்தில் நாய்களை வளர்ப்பது ஹராம் என்று ஒரே போடாகப் போட்டுவிட்டாள். இத்தனைக்கும் காதலிக்கும்போது நிறைய நாய் காணொளி களை எனக்கு இன்ஸ்டகிராமில் அவள் அனுப் பிக் கொண்டேயிருப்பாள். ஒரு நாய் […]

மேலும் பார்க்க

மாற்றம் ஒன்றே மாறாதது

188 பார்வைகள் | இதழ் 26

காலம் என்னும் சக்கரம் சுழன்றபடியே இருக்கின்றது. இம்மாற்றத்திற்கேற்ப இயற்கையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இது யாவரும் அறிந்த ஒன்றே. இம்மாற்றம் மனித வாழ்வையும் விட்டுவைக்கவில்லை. குடிசைகள்கோபுரங்களாகி விட்டன. வீட்டின் வாயிற்படி தாண்டி வெளியே வராமலிருந்த பெண்கள் பல துறைகளிலும் கல்வி கற்று பல சாதனைகளையும் படைத்துள்ளனர். இது பாராட்டப்படக் கூடிய விஷயமாகும். ஆணுக்குப் பெண் அடிமையாக வாழ்ந்த காலம் போய்விட்டது. இன்று ஆணும் பெண் ணும் சரிசமமாக மதிக்கப்படுகிறார்கள். இந்நிலை […]

மேலும் பார்க்க

உள நலனுக்கான உதவி

161 பார்வைகள் | இதழ் 26

பொதுவாக ஒரு சமூகத்தில் உளரீதியான பிரச்சனைகள் காணப்படுவது இயல்பு. அத்துடன் ஒரு சமூகம் பல வகையான துன்ப அனுபவங்களையும், இடர்பாடுகளையும் அனுபவித்திருக்குமேயானால் அந்தசமூகத்தில் பலருக்குப் பலவகையான மன அழுத்தங்கள் இருப்பதைத் தவிர்க்க முடியாது. பிரத்தியேகமாக ஒரு பெரும் போரையும் அந்த போரின் கொடூரத்தையும் அநேக காலம் அனுபவித்த இலங்கைத் தமிழ்ச் சமூகத்தினுள் அநேகருக்குப் பல்வேறுபட்ட துன்ப அனுபவங்கள் பலவிதமான மன அழுத்தங்களைக் கொடுத்திருக்கின்றது. அதேவேளையில் நமது சமூகத்தினுள் மனரீதியான பிரச்சனைகள் […]

மேலும் பார்க்க

பரிமளாவும் Danielலும்

149 பார்வைகள் | இதழ் 26
September 11, 2024 | இமாம்

நான் படித்த வகுப்பில் பரிமளாவும் 8-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை இருந்தார் என்பதை தவிர எனக்கு பரிமளாவை பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. அதற் குத் தேவையும் இருந்ததில்லை. ஆனால் இன்று மட்டும் என்ன தேவை வந்தது? ஏன் எனக்கு பரிமளா ஞாபகத்துக்கு வந்தாள்? இல்லல! ஞாபகத்திற்கு வரவழைத்தேன்! அவளின் முகம் எனக்கு இன்னமும் அதிகமாக ஞாபகத்திற்கு வரவில்லை. ஆனால் தமிழ் படங்களில் காண்பிக்கும் ஒரு ஏழைச் சிறுமியின் […]

மேலும் பார்க்க

Harry Potter Forbidden Forest

167 பார்வைகள் | இதழ் 26

ஒரு மாலை நேரம் வழமை போல என்னுடைய Facebook பார்த்துக்கொண்டிருக்கும் போது Harry Potter – Forbidden Forest Experience in Melbourne என்று ஒரு post வந்தது. என்ன வித்தியாசமாக இருக்கிறதே என்று பார்த்த பொழுது தான் ஜூலை மாதம் வரை Mount Marthaவில் உள்ள the Brias – community forestன் woodland நடைபாதையில் (walking trail) இந்த நிகழ்வு நடைபெறுவதை அறிந்து கொண்டேன். அந்த நடைபாதையில், […]

மேலும் பார்க்க
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்