எனது முடிவு – ப்ரணேவ் கெளசிகன்
”அண்ணா….” தம்பியின் சத்தத்திற்கு விழித்தேன். நான் இன்னமும் பாடசாலை campingல் அல்லவா இருக்கிறேன்? தம்பியோ என்னை உலுக்கினான். “அண்ணா. நீங்கள் இன்று துடுப்பாட்டத்திற்குச் செல்ல வேண்டும். நேரமாகிவிட்டது. எழும்புங்கள்.” அவனின் பதற்றம் என்னையும்பதற்றப்படுத்தியது. இன்று regional துடுப்பாட்டத்திற்கு நான் செல்ல வேண்டும். வேகமாகக் கிளம்பி என்னுடைய புதுச் சப்பாத்துடன் நான் பாடசாலைக்குச் சென்றேன். அங்கு மூன்று பேருந்துகள் கம்பீரத்துடன் நின்றன. எதில் போகவேண்டும் என்ற சிந்தனையில் நிற்கும்போது, “Branev 4th […]
மேலும் பார்க்க
அன்பு முக்கியம் – நிஷ்கலன் விஜயகுமரன்
ஒரு முதியவர் தனியாக வாழ்ந்தார். அவர் ஒரு பெரிய வீட்டில் வசித்து வந்தார். அவரது வீட்டின் முற்றத்தில் ஒரு அழகிய மலர்த் தோட்டம் இருந்தது. அந்த வீட்டுக்கு முன்னால் விளையாட்டு மைதானம் ஒன்று இருந்தது. அங்கு சிறுவர்கள் தினமும் விளையாடுவதுண்டு. அவர்கள் அப்படி விளையாடும்போது பல சமயங்களில் அந்த முதியவரின் வீட்டு முற்றத்தில் பந்து விழுந்து அவருடைய தோட்டம் சேதமாகிவிடும். இதனால் அந்த முதியவர் அச்சிறுவர்களை மிகவும் வெறுத்தார். அவர்கள் விளையாடும்போது கூச்சலிட்டு அவர்களை […]
மேலும் பார்க்க
பங்களிப்பாளர்கள் – இதழ் 29 – தை 2026
இளவேனில் இதழ் 29 – தை 2026© கேசி தமிழ் மன்றம் ஆசிரியர் குழுசாந்தி சிவகுமார்தாமரை மதியழகன்ஜேகேகேதாசரணியா சத்தியன் அட்டைப்படம்அன்ஸ்ருதா தரணி ஜனாதனன்புகைப்படம் – கேதா உள் வடிவமைப்பு சி ஜெயானந்தன் Ilavenil Issue 29 – January 2026© Casey Tamil Manram IncISSN 2200-789X Editorial TeamShanthi SivakumarThamarai MathiyalaganJKKethaSaraniyah Saththiyan Cover ImageAnshruta Dharani JanadathanPhotography – Ketha Design and LayoutS Jeyananthan editor@caseytamilmanram.org.au
மேலும் பார்க்க
ஆஸ்திரேலியாவில் எனது அனுபவம்
என் கணவருடனும் என் சிறு குழந்தைகளுடனும் பிறநாட்டில் கணவரின் தொழில் காரணமாக மிக வசதியுடன் பல வருடங்கள் வாழ்ந்து வந்தோம். இறுதியில் ஆஸ்திரேலியா மெல்பேன் நகரத்தை நாடினோம். இதோ என்ன மாற்றம். ஒன்றுமே அறியாத கண்டத்திற்கு உட்பிரவேசித்து தத்தளிக்க நேர்ந்து விட்டேன். இங்கு வாழும் மக்களுடன் இணைந்து வாழ, அவர்களின் பண்பு, கலாச்சாரம், நாகரீகம், தொழில், உணவு, விளையாட்டு போன்றவற்றை அறிந்து கொள்ள எனக்கு மிகவும் கடினமாகத் தோன்றிற்று. அத்துடன் […]
மேலும் பார்க்க
புலம்பெயர் வாழ்க்கையில் நான் கண்ட நன்மை தீமைகள் ***மூத்தோர் உள்ளத்திலிருந்து***
நான் படிக்கும் காலத்தில் உலகில் மிகச் சிறிய கண்டம் அவுஸ்திரேலியா எனப் படித்த போது ”அட அப்படியா” என என்மனதில் ஒரு அதிருப்தி ஏற்பட்டது. ஆனால் இங்கே வந்து கால் பதித்ததும் முன்பு படித்தது மாபெரும் தவறு என நினைக்கும் அளவுக்கு இந்தச் சிறிய கண்டத்தில் இத்தனை விந்தையா? இத்தனை அழகா? எத்தனை எத்தனை புதுமை என நோக்கும் இடமெல்லாம் பச்சைப் பசேல் என்ற வண்ணம் கண்டு வியப்பின் விளிம்பிற்கே […]
மேலும் பார்க்க
முக்குழி அப்பம்
புகைப்படங்கள் – ஜீவிகா தேங்காய்ச் சிரட்டை ஒன்று தும்புகள் எல்லாம் நீக்கப்பட்டு, அதன் கண்களும் அகற்றப்பட்டுத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. இப்ப இந்தச் சிரட்டைல மூன்று குழிகள் இருக்கல்லா? அதாலதான் முக்குழி எண்ட பெயர் வந்தது. இதால மூடி வச்சுச் சுடுறதால இத முக்குழி அப்பம் எண்டு கூப்பிடுவம். எங்கள் வீட்டில், வார இறுதிகளில் காலை நேரத்து உணவாகப் பல தடவைகள் முக்குழி அப்பத்தை அம்மா சுட்டுக் கொடுத்திருக்கிறார். புட்டு, இடியப்பம், […]
மேலும் பார்க்க
அழைப்பிதழ்
மேசையில் பல கொண்டாட்ட நிகழ்வுகளின் அழைப்பிதழ்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. நாளை மறுதினம் நடக்க இருக்கும் பூப்புனித நீராட்டு விழா. அதற்கான ஆயத்தங்கள் எங்கள் வீட்டிலும் தொடங்கி விட்டது. இந்த நிகழ்வு மிகவும் நெருங்கிய நண்பரின் பிள்ளைகளுக்கு இல்லை. ஒரு நாளும் வீடுவாசலுக்கு வந்தும் போனவர்கள் இல்லை . இது மண்டபத்துக்கு மட்டும் நடக்கும் விழாவுக்கு அழைக்கப்பட்டவர்கள். நெருங்கிய நண்பரின் பிள்ளைக்கோ அல்லது உறவினருக்கோ என்றால் அது […]
மேலும் பார்க்க
Wellbeing Through Challenging Times
Turning 50 is about celebrating, looking back to see one’s life journey and looking forward to what the future holds right? Sometimes however, the universe has a way of putting everything into perspective when one’s hope and optimism are tested. Losing my brother and mum, 2 years in a row […]
மேலும் பார்க்க
மௌனம்
தனி ஒருத்தியாக பிள்ளைகளை வளர்ப்பது, சில நேரங்களில் எளிதானது. யார் பிள்ளைகளை வகுப்புகளுக்கு ஏற்றி இறக்குவது என்ற வாக்குவாதங்கள் அவசியமற்றுப் போகும். ஏனென்றால் நான் மட்டுமேதான் அதைச் செய்ய வேண்டும். நேற்றோடு அவர் இறந்து 7 வருடங்கள் கரைந்தோடியும், அவ்வப்போது அவர் நினைவுகள் என்னை நிலைகுலைய வைக்கிறது. ஆனால், அந்த நினைவுகளை எப்படி சமாளிப்பது என்பதுதான் இத்தனை வருடங்களில் நான் கற்றுக்கொண்டது. நீண்ட நேரம் இதமான சூடான நீரில் குளித்தேன். […]
மேலும் பார்க்க
விவாகரத்து
சில்லென்று வீசும் காற்று மனதை வருடிச்சென்ற கொள்ளை அழகு நிறைந்த இயற்கை. அவசரமாய் பச்சிளம் குழந்தையை ஸ்ட்ரோலரில் வைத்துத் தள்ளியபடி நடக்கும் சீனப்பெண். வேலைக்குச் செல்வோரை ஏற்றியவாறு அடுத்தடுத்து CBDஐ நோக்கிப் பயணிக்கும் துரித ரயில்கள். ஹெட்போனை போட்டுக்கொண்டு தலையை அசைத்தவாறு தமக்குள் சிரிக்கும் இளைஞர். புறப்பட இருக்கும் ரயிலில் ஏறுவதற்குப் படிகளில் விரைந்து ஏறிக்கொண்டிருக்கும் பாடசாலை மாணவி. இவ்வாறு Rushall புகையிரத நிலையம் பரபரப்பாக இருந்தது. நானோ எந்தவித […]
மேலும் பார்க்க